தேவையானவை:
- காய்ந்த மிளகாய் 1 கிலோ,
- தனியா 750 கிராம்,
- சீரகம் ஒரு கப்,
- மிளகு கைநிறைய,
- வேர்க்கடலை ஒரு டேபிள்ஸ்பூன்,
- பெருங்காயம் நெல்லிக்காய் அளவு.
செய்முறை: தனியா, சீரகம் ஆகியவற்றை தனித்தனியே நன்றாக வறுத்துக்கொள்ளவும். வேர்க்கடலையையும் வறுக்கவும். மற்ற சரக்குகளை இலேசாக வறுத்துக்கொள்ளவும். பிறகு எல்லா சரக்குகளையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். காரக்குழம்பு, புளிக்குழம்பு போன்றவற்றுக்கு இந்தப் பொடியைச் சேர்த்துக்கொண்டால் குழம்பு மணக்கும்.