தேவையானவை:
- தூதுவளை இலை 2 கப்,
- உளுத்தம்பருப்பு கால் கப்,
- துவரம்பருப்பு கால் கப்,
- பெருங்காயம் சிறு துண்டு,
- காய்ந்த மிளகாய் 6,
- உப்பு தேவையான அளவு,
- எள் ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: தூதுவளை இலைகளை சுத்தம் செய்து நன்கு உலரவைக்கவும். வெறும் வாணலியில் எள்ளை வறுக்கவும். சிறிது எண்ணெயைக் காயவைத்து பருப்புகளை ஒவ்வொன்றாக வறுத்தெடுக்கவும். மிளகாயையும் அதே வாணலியில் வறுத்து, காய்ந்த தூதுவளை இலைகளை நன்றாக வதக்கியெடுக்கவும். ஆறியதும், பருப்பு, மிளகாய், எள், உப்பு எல்லாவற்றையும் அரைத்து, தூதுவளை இலைகளையும் போட்டுப் பொடித்தெடுக்கவும். சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். சளியை அறுக்கும் சக்தி கொண்டது தூதுவளை.