தேவையானவை:
இட்லி மாவு – 2 கப்,
இட்லி மிளகாய்ப் பொடி – 2 டேபிள்ஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 2, கறிவேப்பிலை,
மல்லித்தழை – தலா சிறிதளவு,
எலுமிச்சம்பழச் சாறு (விருப்பப்பட்டால்) – ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: மாவை சிறு சிறு இட்லிகளாக ஊற்றுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, அத்துடன் சிட்டிகை உப்பு சேருங்கள். வெங்காயம் நிறம் மாறி வதங்கிய பிறகு, இட்லிகள், இட்லிப் பொடி, எலுமிச்சம்பழச் சாறு, கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்குங்கள். இதற்குத் தொட்டுக்கொள்ளவே எதுவும் தேவையில்லை. அப்படியே சாப்பிடக்கூடிய அசத்தலான ஸ்நாக்ஸ்.