தேவையானவை:
- நொறுங்கிய அப்பளம் கொஞ்சம்,
- கடுகு அரை டீஸ்பூன்,
- பச்சை மிளகாய் 2,
- பெருங்காயத்தூள் 2 சிட்டிகை,
- உப்பு திட்டமாக,
- தயிர் ஒன்றே கால் கப்,
- மல்லித்தழை,
- கறிவேப்பிலை தலா சிறிதளவு,
- எண்ணெய் கால் கப்.
செய்முறை: இருப்புச்சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு, பச்சை மிளகாயை வதக்கி உப்பு சேர்த்து, அரைத்து தயிரில் கலக்கவும். கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலையை ஒரு டீஸ்பூன் எண்ணெயில் தாளித்துக் கொட்டவும். அப்பளத் துண்டுகளை மீதி எண்ணெயில் பொரிக்கவும். பொரித்த அப்பளத்தைத் தயிருடன் கலக்கவும். வற்றலோ, வடாமோ நொறுங்கி விட்டாலும் இதே போல் செய்யலாம்.