அப்பள தேங்காய் சாதம்

தேவையானவை:

  • பச்சரிசி  ஒரு கப்,
  • உப்பு  தேவையான அளவு,
  • அப்பளம்  4,
  • எண்ணெய்  தேவையான அளவு.

வறுக்க:

  • தேங்காய் துருவல்  அரை கப்,
  • கறிவேப்பிலை  சிறிதளவு.

தாளிக்க:

  • கடுகு  அரை டீஸ்பூன்,
  • உளுத்தம்பருப்பு  ஒரு டீஸ்பூன்,
  • கடலைப்பருப்பு  2 டீஸ்பூன்,
  • முந்திரி  6,
  • காய்ந்த மிளகாய்  4,
  • தேங்காய் எண்னெய்  2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். அப்பளத்தைப் பொரித்துக்கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து சற்றுப் பொன்னிறமாகப் பொரிந்ததும், பொரித்த அப்பளம், வறுத்த தேங்காய் துருவல், கறிவேப்பிலை, சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறுங்கள். அப்பளச் சுவையும் தேங்காய் எண்ணெய் மணமும் சேர்ந்து, வித்தியாசமான சுவை கொடுக்கும்.