தேவையானவை: புளிப்பில்லாத தயிர் – 2 கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, ஏதேனும் காய் – 100 கிராம். தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய் – 3 டீஸ்பூன், பெருங்காயம் – அரை டீஸ்பூன். அரைக்க: பச்சை மிளகாய் – 5, தனியா – 1 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், பச்சரிசி – 2 டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், இஞ்சி – 1 துண்டு, மல்லித்தழை – சிறிது, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: மல்லித்தழை, தேங்காய் துருவல் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாகச் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைத்து, அரைக்கும்பொழுது தேங்காய், மல்லித்தழையைச் சேர்த்து அரைத்தெடுங்கள். அரைத்த விழுதை தயிர், உப்பு, மஞ்சள்தூளுடன் சேர்த்து நன்கு கலந்து வையுங்கள். காயை நறுக்கி, தனியே வேகவைத்து இதனுடன் சேருங்கள். கடுகு, வெந்தயம், மிளகாய், பெருங்காயம் தாளித்து மேற்கண்ட கரைசலை ஊற்றுங்கள். நுரை கட்டி வந்ததும் இறக்குங்கள்.