ஆப்பிள் தால்

தேவையானவை:

  • புளிப்பு ஆப்பிள்  2,
  • சாம்பார்தூள்  4 டீஸ்பூன்,
  • பெருங்காயத்தூள்  கால் டீஸ்பூன்,
  • பெரிய வெங்காயம்  1,
  • பச்சை மிளகாய்  1,
  • பழுத்த தக்காளி  1,
  • கடுகு, சீரகம்  தாளிக்க தேவையான அளவு,
  • உப்பு  ருசிக்கேற்ப,
  • எண்ணெய்  2 டீஸ்பூன்,
  • வேகவைத்த துவரம்பருப்பு  ஒரு கப்,
  • எலுமிச்சம்பழச் சாறு  சிறிதளவு, மல்லித்தழை  சிறிதளவு.

செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். தக்காளியை விழுதாக அரைக்கவும். ஆப்பிளை தோல் சீவி, துண்டுகளாக நறுக்கி எலுமிச்சம்பழச் சாறில் அரைமணி நேரம் ஊறவிடவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்க்கவும்.

ஒரு நிமிடம் கழித்து, தக்காளி விழுது, சாம்பார்தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். ஆப்பிள் துண்டுகளை சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்கவிடவும். உப்பு, மல்லித்தழை தூவி, அடுப்பை குறைந்த தீயில் வைத்து 10 நிமிடம் கிளறவும். அருமையான ஆப்பிள் மசியல் ரெடி. தக்காளிக்கு பதிலாக புளிக்கரைசலும் சேர்க்கலாம்.