தேவையானவை:
- உருளைக்கிழங்கு கால் கிலோ,
- பாசிப்பருப்பு அரை கப்,
- தக்காளி 2,
- பச்சை மிளகாய் 50 கிராம்,
- மிளகு 2 டேபிள்ஸ்பூன்,
- சீரகம் அரை டீஸ்பூன்,
- கரம் மசாலாதூள் 2 டீஸ்பூன்,
- உப்பு ருசிக்கேற்ப,
- தனியாதூள் ஒரு டீஸ்பூன்,
- ஆம்சூர் தூள் அல்லது எலுமிச்சம்பழச் சாறு ஒரு டீஸ்பூன்.
செய்முறை: தேவையான தண்ணீர் விட்டு பாசிப் பருப்பை வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு, உருளைக்கிழங்கு துண்டுகளை 5 நிமிடம் வறுக்கவும். தனியாதூள், மசாலாதூள், மிளகு, உப்பு சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் வதக்கவும். நடுநடுவே கிளறிவிடவும். மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சீரகத்தைப் போட்டு, வெடித்ததும் வெந்த பருப்பைப் போட்டு மேலும் 2 நிமிடம் கொதிக்கவிடவும். வறுத்த உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து மேலும் 2, 3 நிமிடம் கிளறவும். கலவை கெட்டியானதும், ஆம்சூர் தூளோ அல்லது எலுமிச்சை சாறோ ஊற்றி, ஒரு கிளறு கிளறி இறக்கவும்.