தேவையானவை:
- உருளைக்கிழங்கு கால் கிலோ,
- பெரிய வெங்காயம் 2,
- வரமிளகாய் 4, உப்பு ருசிக்கேற்ப,
- தேங்காய் துருவல் ஒரு டேபிள்ஸ்பூன்,
- பொட்டுக்கடலை ஒரு டேபிள்ஸ்பூன்.
தாளிக்க:
- கடுகு அரை டீஸ்பூன்,
- உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன்,
- கறிவேப்பிலை சிறிதளவு,
- எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, உரித்துத் துண்டுகளாக்கவும். பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். வர மிளகாயுடன் தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, மீதம் இருக்கும் ஒரு பெரிய வெங்காயத்தைச் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தை வதக்கவும். மஞ்சள்தூள், உருளைக் கிழங்கு சேர்த்து வதக்கி, அரைத்த மசாலாவையும், உப்பையும் சேர்த்துப் பிரட்டி நன்கு வதக்கி இறக்கவும்.