உருளைக்கிழங்கு சொதி – மலேஷியா

தேவையானவை:

  • உருளைக்கிழங்கு  3,
  • கெட்டியான தேங்காய்ப்பால்  ஒரு கப்,
  • இரண்டாம் தேங்காய்ப்பால்  2 கப்,
  • பச்சை மிளகாய்  2,
  • பெரிய வெங்காயம்  2,
  • இஞ்சி  ஒரு துண்டு, பட்டை, லவங்கம், ஏலக்காய்  தலா 2,
  • பூண்டு  5 அல்லது 6 பல்,
  • உப்பு  சுவைக்கேற்ப,
  • கறிவேப்பிலை  சிறிதளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, ஒன்றும் பாதியுமாக மசித்துக்கொள்ளுங்கள். வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்குங்கள். இரண்டாம் பாலில் வெங்காயம், பச்சை மிளகாய், நீளவாக்கில் நறுக்கிய இஞ்சி, பூண்டு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கைவிடாமல் கிளறி கொதிக்கவிடுங்கள். 5 நிமிடம் கொதித்த பிறகு, உருளைக்கிழங்கைச் சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து, வெங்காயம் வேகும் வரை கொதிக்க விடுங்கள். வெங்காயம் வெந்தபிறகு, முதல் பாலை ஊற்றி இறக்குங்கள். லேசாகக் கறிவேப்பிலை தூவிப் பரிமாறுங்கள். சப்பாத்தி, பூரி, புலவு போன்ற அயிட்டங்களுக்கு, மலேசியர்கள் செய்யும் சைவ சைட்டிஷ் இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X