தேவையானவை: பெரிய உருளைக்கிழங்கு – 2, முருங்கைக்காய் (சிறியதாக) – 1, பச்சை மிளகாய் – 7, வறுத்த பாசிப்பருப்பு – கால் கப், தேங்காய் – 1 மூடி, எலுமிச்சம்பழம் – பாதி மூடி, மல்லித்தழை நறுக்கியது – 3 டீஸ்பூன், இஞ்சி – சிறு துண்டு, சீரகம் – அரை டீஸ்பூன், உப்பு – ருசிக்கேற்ப.
தாளிக்க: எண்ணெய் – 4 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – 1 ஆர்க்கு.
செய்முறை: தேங்காயைத் துருவி மிக்ஸியில் போட்டு முதல், இரண்டாம், மூன்றாம் பால் என வடிகட்டி எடுக்கவும். முதல் பால் ஒரு டம்ளரை தனியாக வைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை வறுத்து மலர வேகவைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கையும், முருங்கைக்காயையும் நீளவாட்டில் நறுக்கிக் கொள்ளவும். சிறிது இஞ்சி, பச்சை மிளகாய் + சீரகத்தை உப்பு சேர்த்து அரைக்கவும். காயை மூன்றாம் பாலில் வேகவிடவும். காய் வெந்ததும் இரண்டாம் பால், வெந்த பாசிப்பருப்பு, அரைத்த விழுது சேர்த்து வேகவிடவும்.
சற்று கெட்டியானதும் வாணலியில் எண்ணெய் விட்டு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி அத்துடன் சேர்க்கவும். எல்லாம் ஒன்று சேர்ந்து சிறிது கெட்டியானதும் முதல் பாலை விட்டு நுரை கூடியதும் (கொதிக்கக் கூடாது) இறக்கி எலுமிச்சம்பழச்சாறு பிழிந்து கலக்கிவிடவும்.
உருளைக்கிழங்கு ரோஸ்ட் தேவையானவை: பெரிய உருளைக் கிழங்கு – 3.
அரைப்பதற்கு: மிளகாய்தூள் – 3 டீஸ்பூன், தேங்காய் துருவல் – 1 டீஸ்பூன், சோம்பு – கால் டீஸ்பூன், பூண்டு – 1 பல், பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.
தாளிக்க: எண்ணெய் – கால் கப், கடுகு – அரை டீஸ்பூன், சோம்பு – கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்.
செய்முறை: உருளையை தோலுடன் கழுவி, நீளவாட்டில் சற்று கனமான துண்டுகளாக நறுக்கவும். அதில் அரைத்தவற்றை பிசறவும். வாணலியில் எண்ணெய்விட்டு தாளித்து அதில் பிசறிய துண்டுகளை போட்டு நன்கு சுருள வேகவைத்து எடுக்கவும் (இது பார்ப்பதற்கு ஃபிஷ் ஃப்ரை மாதிரி இருக்கும்). அடுப்பை குறைந்த தணலில் வைத்து வேக வைக்கவும்.