தேவையானவை:
- உடைத்த உளுத்தம்பருப்பு ஒரு கப்,
- துருவிய இஞ்சி ஒரு டீஸ்பூன்,
- பச்சை மிளகாய் 2,
- தனியாதூள் அரை டீஸ்பூன்,
- மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்,
- பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்,
- சீரகம் ஒரு டீஸ்பூன்,
- எண்ணெய் 2 டீஸ்பூன்.
செய்முறை: பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைத்து, குறைந்த நீரில் 10 நிமிடம் வேகவிடவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பெருங்காயத்தூள், தனியாதூள், மஞ்சள்தூள் போடவும். 2 நிமிடம் கிளறவும். பிறகு இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, வெந்த உளுத்தம்பருப்பையும் கொட்டி, உப்பு போட்டு, 5 நிமிடம் கிளறவும். சுவையான உளுத்தம்பருப்பு மசியல் ரெடி. இது சப்பாத்தி அல்லது சாதத்துடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.