தேவையானவை:
- கோதுமை மாவு ஒரு கப்,
- உப்பு தேவையான அளவு,
- நெய் 2 எண்ணெய் சுட்டெடுக்க தேவையான அளவு.
டீஸ்பூன், பூரணத்துக்கு:
- உளுத்தம்பருப்பு அரை கப்,
- பச்சை மிளகாய் 2,
- இஞ்சி ஒரு துண்டு,
- உப்பு தேவையான அளவு,
- எலுமிச்சம்பழச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன்.
தாளிக்க: எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், பெருங்காயம் அரை டீஸ்பூன்.
செய்முறை: நெய், உப்பு சேர்த்து, கோதுமை மாவை நன்கு பிசைந்து வைத்துக்கொள்ளுங்கள். உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள். அரைத்த விழுதை இட்லிப் பாத்திரத்தில் வைத்து வேகவைத்துக் கொள்ளுங்கள். ஆறியதும் எடுத்து உதிர்த்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். இதுதான் சப்பாத்திக்கான பூரணம்.
சப்பாத்தி மாவை சிறிது எடுத்து, கிண்ணம் போல செய்து, உள்ளே உளுந்து பூரணத்தை வைத்து நிரப்புங்கள். கிண்ணத்தை நன்கு மூடி, மெல்லிய சப்பாத்தியாகத் திரட்டி, தோசைக்கல்லில் போட்டு வேகவைத்தெடுங்கள். இது, உடலுக்கு வலு சேர்க்கும் சத்து நிறைந்த சப்பாத்தி.