தேவையானவை:
- பிஞ்சு கத்திரிக்காய் கால் கிலோ.
மசாலாவிற்கு:
- வர மிளகாய் 6,
- புளி ஒரு சுளை,
- மல்லி விதை ஒன்றரை டீஸ்பூன்,
- சீரகம் அரை டீஸ்பூன்,
- சின்ன வெங்காயம் ஐந்தாறு,
- பூண்டு 2 பல்,
- உப்பு தேவையான அளவு.
தாளிக்க: எண்ணெய் 5 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தலா சிறிதளவு.
செய்முறை: கத்திரிக்காயைக் காம்பு மட்டும் நீக்கி பாவாடையுடன், அப்படியே நான்காக வகிர்ந்து கொள்ளவும். மசாலாவிற்கு உள்ள சாமான்களை விழுதாக அரைத்து எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும். வதக்கிய மசாலா ஆறியபின் அதைக் காயினுள் திணித்து காயை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும். தணலைச் சின்னதாக வைத்து, மூடி வைத்து வதக்கவும். அரைத்த மசாலா மீதம் இருந்தால் அதையும் காயின் மேல் போட்டு விடவும். கத்திரிக்காய் வெந்து முறுகலாக வதங்கியதும் கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
குறிப்பு: மசாலாவுடன் புளி வைத்து அரைப்பதால் இந்தத் தயாரிப்பில் கத்திரிக்காயின் காரல் இருக்காது. கத்திரிக்காயை அரிசி கழுவிய நீரில் 5 நிமிடம் ஊற வைத்துக் கழுவினால் இன்னும் சுத்தமாகக் கார்ப்பு இருக்காது.