கடலைப் பருப்பு பக்கோடா

தேவையானவை:

  • கடலைப் பருப்பு  1 கப்,
  • பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்  அரை கப்,
  • இஞ்சி  1 துண்டு,
  • பச்சை மிளகாய்  2,
  • பூண்டு  4 பல்,
  • புதினா,
  • மல்லித்தழை,
  • கறிவேப்பிலை  தலா சிறிதளவு,
  • சோம்பு  அரை டீஸ்பூன்,
  • உப்பு  சுவைக்கேற்ப,
  • எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை: கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்து நசுக்கிக் கொள்ளுங்கள். சோம்பைப் பொடித்துக்கொள்ளுங்கள். கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினா மூன்றையும் பொடியாக நறுக்குங்கள். கடலைப் பருப்பை சற்றுக் கரகரப்பாக அரையுங்கள். எண்ணெய் நீங்கலாக, மற்ற பொருட்களை கலந்து பிசறி, காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு, வேகவிட்டெடுங்கள்.

சிற்றுண்டியாக சாப்பிடுவதற்கும் காரக்குழம்பு, மோர்க்குழம்பில் போடுவதற்கும் ஏற்ற பக்கோடா இது.