...

கருணைக்கிழங்கு குழம்பு

தேவையானவை: கருணைக்கிழங்கு – 3, பூண்டு – 10 பல், சின்ன வெங்காயம் – 10, புளி – எலுமிச்சை அளவு, உப்பு – தேவைக்கேற்ப, சாம்பார்பொடி – 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, துவரம்பருப்பு வேகவைத்த நீர் மட்டும் – கால் கப்.

தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், சோம்பு – கால் டீஸ்பூன், பெருங்காயம் – 1 சிட்டிகை, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கருணைக்கிழங்கை தோலுடன், நன்கு கழுவி, குக்கரில் 2 விசில் சத்தம் வரும்வரை வைத்து வேகவைத்துக்கொண்டு நீரை வடித்து விட்டு தோலை உரித்தெடுக்கவும். அதை சற்று கனமான வளையங்களாக நறுக்கவும். பூண்டு, வெங்காயத்தை தோல் உரித்துக் கொள்ளவும். புளி + உப்பை 6 டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அதில் சாம்பார்பொடி + மஞ்சள்தூள் கலக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிதங்களை போட்டு தாளித்து, சிவந்ததும் பூண்டு + வெங்காயம் + கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் அதில் நறுக்கிய கிழங்கையும் சேர்த்து ஒரு கிளறு கிளறி, கரைத்த புளி + சாம்பார்பொடி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். பருப்புத் தண்ணீரையும் சேர்க்கவும். குழம்பு கெட்டியாகி எண்ணெய் மேலே மிதந்து வரும் சமயம் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சாதத்தில் கொஞ்சமே போட்டுப் பிசறி சாப்பிட்டாலும், சுவையும் மணமும் சுண்டி இழுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.