கறிவேப்பிலை சாதம்

தேவையானவை:

  • பச்சரிசி  ஒரு கப்,
  • உப்பு  தேவையான அளவு,
  • நெய்  ஒரு டேபிள்ஸ்பூன்.

வறுத்து பொடிக்க:

  • கறிவேப்பிலை  ஒரு கைப்பிடி,
  • உளுத்தம்பருப்பு  ஒரு டீஸ்பூன்,
  • மிளகு  அரை டீஸ்பூன்,
  • சீரகம்  ஒரு டீஸ்பூன்,
  • பெருங்காயத்தூள்  அரை டீஸ்பூன்,
  • எண்ணெய்  ஒரு டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு  அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு  ஒரு டீஸ்பூன், நெய்  2 டீஸ்பூன். செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். வறுக்க கொடுத்துள்ள பொருட்களில் கறிவேப்பிலை நீங்கலாக மற்றவற்றை சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள். வெறும் கடாயில் கறிவேப்பிலையை நன்கு வறுத்தெடுத்து, வறுத்த பொருட்களுடன் சேர்த்து ஒன்றாக பொடித்து சாதத்துடன் கலந்து கொள்ளுங்கள். கடை சியில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து சேர்த்து, நெய் சேர்த்து கலந்து பரிமாறவும். உடல் நலனுக்கு உகந்த சாதம் இது.