காராபாத்

தேவையானவை:

  • சீரகச்சம்பா அரிசி  ஒரு கப்,
  • பெரிய வெங்காயம்  1,
  • தக்காளி  3,
  • மிளகாய்தூள்  ஒரு டீஸ்பூன்,
  • கரம் மசாலாதூள்  அரை டீஸ்பூன்,
  • எலுமிச்சம்பழச் சாறு  2 டீஸ்பூன்,
  • மல்லித்தழை  சிறிதளவு,
  • உப்பு  தேவையான அளவு.

தாளிக்க: கடுகு  அரைடீஸ்பூன், சீரகம்  கால் டீஸ்பூன், நெய்  2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அரிசியுடன் 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் வைத்து, ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து, 2 நிமிடம் கழித்து இறக்குங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். நெய்யைக் காயவைத்து கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நிறம் மாறி வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து வதக்குங்கள். தக்காளி, கரைந்து வதங்கியதும் மிளகாய்தூள், கரம் மசாலாதூள், மல்லித்தழை சேர்த்து வதக்குங்கள். பிறகு, வடித்த சாதம், எலுமிச்சம்பழச் சாறு, தேவையானால் சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.