கார்ன் பூரி

தேவையானவை:

  • கோதுமை மாவு  ஒரு கப்,
  • மைதா  ஒரு கப்,
  • உப்பு  சுவைக்கேற்ப,
  • குடைமிளகாய்  1,
  • மக்காச்சோளம்  1,
  • கரம் மசாலாதூள்  கால் டீஸ்பூன்,
  • கறுப்பு உப்பு  ஒரு சிட்டிகை,
  • சாட் மசாலா  கால் டீஸ்பூன்,
  • எண்ணெய்  பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: குடைமிளகாயைப் பொடியாக நறுக்கவும். சோளமணிகளை உதிர்க்கவும். இரண்டையும் வேகவைத்து மசிக்கவும். கோதுமை மாவுடன் உப்பு, சிறிது எண்ணெய் கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். வேகவைத்து மசித்த சோளக்கலவையுடன், கரம் மசாலா, கறுப்பு உப்பு, சாட் மசாலா, தேவையான உப்பு சேர்த்து கலந்துவைக்கவும். கோதுமை மாவினை உருண்டைகளாக்கி, நடுவே குடைமிளகாய், சோளக் கலவையை வைத்து, பூரிகளாகத் தேய்த்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.