கிரீன் பீஸ் பூரி

தேவையானவை:

  • கோதுமை மாவு  ஒரு கப்,
  • மைதா மாவு  ஒரு கப்,
  • உப்பு  சுவைக்கேற்ப,
  • சீரகம்  கால் டீஸ்பூன்,
  • இஞ்சி,
  • பச்சை மிளகாய் விழுது  அரை டீஸ்பூன்,
  • கரம் மசாலாதூள்  கால் டீஸ்பூன்,
  • பச்சை பட்டாணி  அரை கப்,
  • எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை: பச்சை பட்டாணியை வேகவைத்து மசித்துக்கொள்ளவும் (பச்சை பட்டாணி சீஸன் இல்லையென்றால், காய்ந்த பட்டாணியை ஊறவைத்து உபயோகிக்கலாம்). கோதுமை மாவையும் மைதா மாவையும் கலந்து, உப்பு, எண்ணெய் சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். பச்சைப்பட்டாணி விழுது, சீரகம், மிளகாய் விழுது, கரம் மசாலா எல்லாவற்றையும் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பூரி மாவை செப்பு போல செய்து, உள்ளே பட்டாணி மசாலாவை வைத்து, மீண்டும் தேய்த்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.