...

கீரை இட்லி

இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மை யாகவும் சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான் இருக்கிறது. அதற்கான அளவு: புழுங்கலரிசி – 2 கப், முழு உளுத்தம் பருப்பு – அரை கப், உப்பு – ருசிக்கேற்ப.

அரிசியையும் பருப்பையும் தனிதனியே ஊற வைத்து, அரிசியை நைஸாகவும், உளுந்தை தண்ணீர் தெளித்து பொங்க பொங்கவும் அரைத்துக் கொள்ளுங்கள். உப்பு சேர்த்து நன்கு அடித்து கலந்து, 6 முதல் 8 மணி நேரம் வரை புளிக்கவிடுங்கள்.

தேவையானவை:
இட்லி மாவு – 2 கப்,
இளம் முருங்கைக் கீரை – ஒரு கப்,
பச்சை மிளகாய் விழுது – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மாவுடன் கீரை, பச்சை மிளகாய் விழுது உப்பு சேர்த்து, நன்கு கலக்கி இட்லி தட்டுகளில் ஊற்றி வேக வைத்து எடுங்கள். கீரை, துளிராக இருக்க வேண்டியது முக்கியம்.

75 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.