தேவையானவை: பாலக் கீரை ஒரு கட்டு, மிளகாய்தூள் ஒரு டீஸ்பூன், தயிர் 3 டேபிள்ஸ்பூன், கடலைமாவு 3 டீஸ்பூன், வெள்ளை கொண்டைக்கடலை ஒரு டீஸ்பூன், வேர்க்கடலை 2 டீஸ்பூன், உப்பு, சர்க்கரை சிறிதளவு. தாளிக்க: எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் சிறிதளவு, கடுகு ஒரு டீஸ்பூன், சீரகம் ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது.
செய்முறை: கீரையைக் கழுவி, ஆய்ந்து நறுக்கி வைக்கவும். அரைமணி நேரம் வெள்ளை கடலையையும், வேர்கடலையையும் வெந்நீரில் ஊற வைத்து, குக்கரில் வேகவிடவும். பிறகு கீரையையும் கடலைகளுடன் சேர்த்து வேக விடவும். தயிரில் கடலைமாவை பேஸ்ட் மாதிரி கரைத்து கொள்ளவும். கீரை, கடலை கலவையை வேகவைத்த தண்ணீருடன் நன்றாக மசித்து கொள்ளவும். தயிரில் கரைத்த கடலைமாவை இதில் கலக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, கீரைக் கலவையில் கொட்டவும். கடைசியில் சிறிது சர்க்கரையும், தேவையான உப்பையும் போட்டு, 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.