குட்டி உருளைக்கிழங்கு வறுவல்

தேவையானவை:

  • உருளைக்கிழங்கு  கால் கிலோ,
  • முந்திரிப்பருப்பு  12,
  • சோம்பு  அரை டீஸ்பூன்,
  • மிளகாய் அரைத்த விழுது  அரை டீஸ்பூன்,
  • சின்ன வெங்காயம்  5,
  • கறிவேப்பிலை  7 இலை,
  • கார்ன்ஃப்ளார்  2 டீஸ்பூன்,
  • பச்சை மிளகாய்  2,
  • உப்பு,
  • எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலை நீக்கி உதிர்த்துக்கொள்ளுங்கள். முந்திரிப்பருப்பை நீளவாக்கில் இரண்டாக ஒடித்துக்கொண்டு, எண்ணெயில் லேசாக (சிவக்கவிடாமல்) பொரித்துக்கொள்ளுங்கள். வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். சோம்பைத் தூள் செய்யுங்கள். உதிர்த்த உருளைக்கிழங்கு, மிளகாய் விழுது, கார்ன்ஃப்ளார், உப்பு, இஞ்சிபூண்டு விழுது, வெங்காயம், பச்சை மிளகாய்.. இவை எல்லாவற்றையும் கலந்து பிசையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, பிசைந்த விழுதைக் கிள்ளிப் போட்டுப் பொரித்தெடுங்கள். ரசம் சாதம், தயிர் சாதத்துக்கு சூப்பரான சைட்டிஷ் இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X