...

கொட்டு ரசம்

தேவையானவை:

  • புளி  எலுமிச்சம்பழ அளவு,
  • உப்பு  ஒரு டீஸ்பூன்,
  • பெருங்காயம்  கால் டீஸ்பூன்.

ரசப்பொடிக்கு: துவரம்பருப்பு  ஒரு டேபிள்ஸ்பூன், தனியா  2 டீஸ்பூன், மிளகு  ஒரு டீஸ்பூன், சீரகம்  அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய்  5.

தாளிக்க: நெய்  கால் டீஸ்பூன், கொத்துமல்லி, கறிவேப்பிலை  சிறிது.

செய்முறை: பொடிக்கு தேவையானவற்றை வறுக்காமல் பொடித்துக் கொள்ளவும். புளியை 2 கப் நீர் விட்டு நன்றாக கரைத்துக் கொள்ளவும். உப்பு, பெருங்காயம் போட்டு கொதிக்க வைக்கவும். பிறகு பொடியை போட்டு, நெய்யில் கடுகு, கொத்துமல்லி, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்.

குறிப்பு: தக்காளி விரும்பினால் சேர்க்கலாம். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. சுவையில் பெரிய வித்தியாசம் இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.