கோகனட் தால்

தேவையானவை:

  • பாசிப்பருப்பு  அரை கப்,
  • தேங்காய் துருவல்  ஒரு கப்,
  • மிளகாய்தூள்  ஒரு டீஸ்பூன்,
  • மஞ்சள்தூள்  அரை டீஸ்பூன்,
  • பூண்டு  6 பல்,
  • கறிவேப்பிலை  சிறிதளவு,
  • எண்ணெய்,
  • கடுகு  தேவையான அளவு,
  • காய்ந்த மிளகாய்  2,
  • உப்பு  ருசிக்கேற்ப.

செய்முறை: பருப்பை வாசனை வரும்வரை எண்ணெய் இல்லாமல், வெறும் வாணலியில் வறுக்கவும். பிறகு வேகவிடவும். மிக்ஸியில் தேங்காய், பூண்டு, மஞ்சள்தூள், மிளகாய்தூள் சேர்த்து அரைக்கவும். வெந்த பருப்புடன் உப்பு, அரைத்த கலவை சேர்க்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, காய்ந்த மிளகாயை இரண்டாகக் கிள்ளிப் போட்டு, கறிவேப்பிலை போட்டு, பருப்பு கலவையை சேர்க்கவும். கொதிக்கவிட வேண்டாம். சூடானால் போதுமானது. சாதம், பப்படத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.