...

கோதுமை மாவு பரோட்டா

தேவையானவை: கோதுமை மாவு & 2 கப், நெய் & ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை & ஒரு டீஸ்பூன், ஆப்பசோடா & அரை சிட்டிகை, உப்பு & தேவையான அளவு, எண்னெய் & நெய் கலவை & தேவையான அளவு.

செய்முறை: மேலே கூறியுள்ள எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள். நன்கு அழுத்திப் பிசைந்து, சிறிது நேரம் வைத்திருங்கள். பிறகு அதிலிருந்து சிறிது மாவை எடுத்து, நன்கு மெல்லிய, பெரிய சப்பாத்திகளாக திரட்டுங்கள். அதன் மேல் எண்ணெய் & நெய் கலவையைத் தடவி, புடவை கொசுவம் போல மடித்துக்கொள்ளுங்கள். மடித்ததை வட்டமாக சுருட்டி, சற்றுக் கனமாக திரட்டுங்கள். தோசைக்கல்லில் மிதமான தீயில், எண்ணெய், நெய் சேர்த்து சுட்டெடுங்கள். ருசியாக இருக்கும் இந்த கோதுமை பரோட்டா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.