தேவையானவை:
- பெரிய வெங்காயம் 1,
- பச்சை மிளகாய் 2,
- உப்பு திட்டமாக,
- தயிர் அரை கப்,
- பொடியாக நறுக்கிய மல்லித்தழை சிறிதளவு,
- இஞ்சி சிறுதுண்டு,
- பேபி உருளைக்கிழங்கு ஏழெட்டு.
செய்முறை: வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாயை அரைக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து உரிக்கவும். வெங்காயத்தை தண்ணீரில் போட்டு அலசி, தண்ணீரை வடித்துக் கொள்ளவும். வெங்காயத்துடன் இஞ்சிமிளகாய் விழுது, வேகவைத்த உருளைக்கிழங்கு உப்பு, மல்லித்தழை சேர்க்கவும். தேவையான சமயத்தில் தயிர் கலந்து உபயோகிக்கவும்.
குறிப்பு: சம்பலுக்கு வெங்காயத்தைக் கழுவி உபயோகித்தால் அதில் உள்ள காட்டம் போகும்.