தேவையானவை:
- சேமியா 1 கப்,
- கேரட் 1, பீன்ஸ் 6,
- குடமிளகாய் சிறியதாக 1,
- கோஸ் 50 கிராம்,
- பெரிய வெங்காயம் 1,
- பச்சை மிளகாய் 2,
- இஞ்சி 1 துண்டு,
- பூண்டு 6 பல்,
- வெங்காயத் தாள் ஒரு கைப்பிடி,
- சோயா சாஸ் அரை டீஸ்பூன்,
- உப்பு தேவைக்கு,
- எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்,
- மிளகுதூள் 1 டீஸ்பூன்.
செய்முறை: 6 கப் தண்ணீரை கொதிக்கவைத்து சேமியாவை வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். காய்கறிகளை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்குங்கள் (பூண்டு, இஞ்சி, மிளகாய் உள்பட). எண்ணெயைக் காய வைத்து (புகைய), வெங்காயத் தாள் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சேருங்கள். அத்துடன் உப்பு, சோயா சாஸ் சேர்த்து 5 நிமிடம் வதக்கி சேமியாவை சேருங்கள். அத்துடன், மிளகுதூள், வெங்காயத் தாள், உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்