தேவையானவை: சேமியா & 1 கப், புளிக்காத தயிர் & 2 கப், பால் & 1 கப், பெருங்காயம் & அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் & 2, இஞ்சி & 1 துண்டு, கறிவேப்பிலை & சிறிது, உப்பு & தேவைக்கு, எண்ணெய் & 1 டீஸ்பூன், மல்லித்தழை & 1 டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு & 1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு & 2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு & 10, திராட்சை & 12, எண்ணெய் & 1 டீஸ்பூன் செய்முறை: வாணலியில் 1 டீஸ்பூன் காய வைத்து சேமியாவை வறுத்தெடுங்கள். 6 கப் தண்ணீர் கொதிக்க விட்டு, அதில் சேமியாவை சேர்த்து வேக விட்டு வடித்து வையுங்கள். சூடாக இருக்கும்போதே அரைத்த விழுது, உப்பு, பெருங்காயம் சேர்த்து கலந்துகொள்ளுங்கள். நன்கு ஆறியவுடன் தயிர், பால், மல்லித்தழை, கறிவேப்பிலை சேருங்கள். எண்ணெயைக் காய வைத்து, தாளிக்கும் பொருட்களை தாளித்து சேர்த்து கலந்து குளிர வைத்து பரிமாறுங்கள்.