தேவையானவை:
- சேமியா 1 கப்,
- பெரிய வெங்காயம் 2,
- தக்காளி 3,
- சற்று புளித்த தயிர் அரை கப்,
- இஞ்சி, பூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்,
- பச்சை மிளகாய் 3,
- நறுக்கிய காய்கறி கலவை அரை கப்,
- புதினா, மல்லித்தழை சிறிது,
- எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்,
- நெய் 1 டேபிள்ஸ்பூன்,
- மிளகாய்தூள் 1 டீஸ்பூன்.
தாளிக்க:
- பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 1,
- எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்,
- நெய் 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: எண்ணெய், நெய்யைக் காய வைத்து தாளிக்கும் பொருட்களை சேருங்கள். பின்னர் மெல்லிசாக நறுக்கிய வெங்காயம், கீறிய மிளகாய், சிட்டிகை உப்பு சேர்த்து நிறம் மாறும் வரை வதக்குங்கள். வதங்கியதும் அதில் புதினா, மல்லித்தழை, அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். தக்காளி, காய்கறி, உப்பு சேர்த்து காய் வேகும் வரை வதக்குங்கள். அதில் தயிர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு, பின்னர் இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள். சேமியாவை சேர்த்து 2 நிமிடம் வேகவிட்டு, தீயை குறைத்துவைத்து மூடி 5 நிமிடம் வேக விட்டு இறக்குங்கள்.