சோயா சேமியா

தேவையானவை:

  • சேமியா  1 கப்,
  • சோயா நக்கட்ஸ்  10,
  • பெரிய வெங்காயம்  2,
  • வெங்காயத் தாள்  ஒரு கைப்பிடி,
  • சோயா சாஸ்  1 டீஸ்பூன்,
  • உப்பு  தேவைக்கு,
  • எண்ணெய்  2 டேபிள்ஸ்பூன்.

அரைக்க: மிளகாய்தூள்  ஒன்றரை டீஸ்பூன், பூண்டு  6 பல்.

செய்முறை: 6 கப் தண்ணீரை கொதிக்க வைத்து சேமியாவை வேக வைத்து வடியுங்கள். கொதிக்கும் நீரில் சோயாவை போட்டு 10 நிமிடம் கழித்து பிழிந்து எடுத்து, பச்சை தண்ணீரில் இருமுறை அலசி பிழிந்துகொள்ளுங்கள். சிறு துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்குங்கள். மிளகாய்தூள், பூண்டு சேர்த்து ஒன்றாக அரையுங்கள். எண்ணெயை நன்கு காய வைத்து அரைத்த விழுதை சேருங்கள். பச்சை வாசனை போனதும் வெங்காயம், சிறிது உப்பு, பிழிந்துவைத்திருக்கும் சோயா சேர்த்து நன்கு வதக்கி, சோயா சாஸ், சேமியா, வெங்காயத் தாள், தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X