தக்காளி சின்ன வெங்காய தொக்கு

தேவையானவை:

  • பழுத்த தக்காளி   அரை கிலோ,
  • சின்ன வெங்காயம்   150 கிராம்,
  • மிளகாய்தூள்  ஒன்றரை டீஸ்பூன்,
  • தனியாதூள்   ஒரு டீஸ்பூன்,
  • பூண்டு   8 பல்,
  • புளி விழுது   ஒரு டேபிள்ஸ்பூன்,
  • கறிவேப்பிலை   சிறிது,
  • உப்பு   தேவையான அளவு.

தாளிக்க: கடுகு   அரை எண்ணெய்   கால் கப், சோம்பு   அரை டீஸ்பூன்.

செய்முறை: தக்காளியை அரைத்து சாறு எடுங்கள். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து தனியாக அரைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, சோம்பு தாளித்து பூண்டு சேர்த்து நன்றாகப் பொரிந்ததும் அரைத்த வெங்காய விழுதைச் சேருங்கள். மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை கிளறி, புளி விழுது, தக்காளி சாறை சேருங்கள். அதனுடன் உப்பு, மிளகாய்தூள், தனியாதூள், கறிவேப்பிலை சேர்த்து சுருளாக கிளறி இறக்குங்கள். சப்பாத்திக்கு ஏற்ற சூப்பர் சைட் டிஷ்!

குறிப்பு: பூண்டை சிறு துண்டுகளாக நறுக்கியும் போடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X