தேவையானவை:
- மிக்ஸியில் அடித்து வடிகட்டிய தக்காளி ஜூஸ் 2 கப்,
- சர்க்கரை ஒரு கப்,
- சிட்ரிக் ஆசிட் அரை டீஸ்பூன்,
- ரோஸ் எசன்ஸ் (விருப்பப்பட்டால்) ஒரு டீஸ்பூன்,
- ரெட் கலரிங் பவுடர் ஒரு சிட்டிகை.
செய்முறை: தக்காளி ஜூஸ், சர்க்கரை, சிட்ரிக் ஆசிட் மூன்றையும் வாணலியில் கொட்டி, மிதமான தீயில் கிளறுங்கள். பாகு பதத்தில் வந்ததும் (தட்டில் விட்டால் முத்து போல் விழும்) இறக்கி கலரிங் பவுடர், ரோஸ் எசன்ஸ் விடுங்கள். ஒரு மரப்பலகையின் மேல் கண்ணாடி பாட்டிலை வைத்து சூடாக நிரப்புங்கள். பிரெட், சப்பாத்திக்கு ஏற்ற பிரமாதமான ஜாம் இது.