தேவையானவை:
- துவரம்பருப்பு ஒரு கப்,
- தக்காளி 4,
- பச்சை மிளகாய் 1,
- மல்லித்தழை சிறிதளவு,
- மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்,
- பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்,
- உப்பு ருசிக்கேற்ப, கறிவேப்பிலை சிறிதளவு.
தாளிக்க: கடுகு ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன், சீரகம் ஒரு டீஸ்பூன், எண்ணெய் 2 டீஸ்பூன்.
செய்முறை: தக்காளி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும், குக்கரில் துவரம்பருப்புடன் பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவிடவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, சீரகம் போட்டு, வெடித்ததும் உளுத்தம்பருப்பை போடவும். உளுத்தம்பருப்பு சிவந்ததும், நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் போட்டு 5 நிமிடம் வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும், வெந்த பருப்பை சேர்த்து, தேவையான உப்பு, கறிவேப்பிலை போட்டு இறக்கவும். சூடான சாதத்துடனோ, புல்காவுடனோ சாப்பிட நன்றாக இருக்கும்.