தேவையானவை:
- துவரம்பருப்பு அரை கப்,
- நன்றாக பழுத்த தக்காளி 3,
- பச்சைமிளகாய் 4,
- புளி சிறிய உருண்டை,
- பூண்டு 4 பல்,
- சீரகம் அரை டீஸ்பூன்,
- மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்,
- உப்பு தேவையான அளவு.
தாளிக்க:
- கடுகு ஒரு டீஸ்பூன்,
- உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்,
- காய்ந்த மிளகாய் 1,
- பூண்டு 5 பல்,
- எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்,
- கறிவேப்பிலை சிறிது.
செய்முறை: குக்கரில் பருப்பை போட்டு 3 விசில் வரும்வரை வேக வையுங்கள். அதில், பொடியாக நறுக்கிய தக்காளி, பச்சைமிளகாய், உரித்த பூண்டு, சீரகம், புளி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து மீண்டும் ஒரு விசில் வந்ததும் இறக்குங்கள். ஆறியதும் நன்றாக கடையுங்கள். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு சேர்த்து, நன்கு வதங்கியதும், பருப்பை சேர்த்து மேலும் சிறிது கடைந்து இறக்குங்கள். சூடான சாதத்தில் கலந்து சாப்பிட புளிப்பும், காரமும் கலந்து ருசிக்கும்.