தேவையானவை:
- தக்காளி (நன்கு பழுத்தது) கால் கிலோ,
- பெரிய வெங்காயம் 1,
- பச்சை மிளகாய் 2,
- மிளகாய்தூள் முக்கால் டீஸ்பூன்,
- உப்பு தேவையான அளவு,
- பூண்டு முழுதாக 1, கறிவேப்பிலை,
- மல்லி இலை சிறிதளவு, எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பூண்டை உரித்து நீளவாக்கில் இரண்டாக நறுக்கவும், பச்சை மிளகாயையும், வெங்காயத்தையும் நீளமாகவும் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியைத் துண்டுகளாக நறுக்கவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கி தக்காளியைச் சேர்க்கவும். தக்காளி வதங்கியதும் உப்பு, மிளகாய்தூள் சேர்த்துப் பிரட்டி இறக்கி மல்லி சேர்க்கவும்.
குறிப்பு: பிரியப்பட்டால் இறக்கும் முன், கால் மூடி தேங்காய் துருவலும் சேர்க்கலாம்.