தேவையானவை:
- நாட்டு தக்காளிக்காய் 3,
- பச்சை மிளகாய் 3,
- பூண்டு 4 பல்,
- முருங்கைக்கீரை உருவியது 2 கப்,
- துவரம்பருப்பு அரை கப்,
- மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை,
- உப்பு தேவையான அளவு.
தாளிக்க:
- கடுகு அரை டீஸ்பூன்,
- உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்,
- காய்ந்த மிளகாய் 1,
- நசுக்கிய பூண்டு 3 பல்,
- எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: குக்கரில் பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக வையுங்கள். வெந்த பருப்பில் கீரை, தக்காளிக்காய், உரித்த பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து குக்கரில் 1 விசில் வரும்வரை வைத்து இறக்கி, மெதுவாக பிரஷரை எடுத்துவிட்டு, தக்காளிக்காய், கீரையை நன்கு மசித்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதங்கியதும், பூண்டை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, கீரையைச் சேர்த்து மேலும் சிறிது மசித்து எடுங்கள். சாதத்துடன் பிசைந்து சாப்பிட லாம்.
குறிப்பு: பெங்களூர் தக்காளி யாக இருந்தால், சிறிது புளி சேர்க்கவேண்டும்.