தக்காளி வெங்காயம் இல்லாத குழம்பு

தேவையானவை: துவரம்பருப்பு – கால் கப், சௌசௌ – 1, சாம்பார் பொடி – 3 டீஸ்பூன், புளி – நெல்லிக்காய் அளவு, பெருங்காயம் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கறிவேப்பிலை, மல்லித்தழை – தலா சிறிதளவு. தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, எண்ணெய் – 3 டீஸ்பூன்

செய்முறை: துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவையுங்கள். சௌசௌவை தோல், விதை நீக்கி துண்டுகளாக நறுக்குங்கள். பருப்பில் சௌசௌ, சாம்பார் பொடி, பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வேகவிட்டு புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி சேருங்கள். புளி பச்சை வாசனை போக கொதித்த பிறகு, தாளிக்கும் பொருட்களை தாளித்து சேர்த்து, கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து இறக்குங்கள்.

எள்ளு குழம்பு தேவையானவை: சின்ன வெங்காயம் – 1 கப், தக்காளி – 4, மிளகாய்தூள் – 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, உப்பு – தேவையான அளவு. பொடிக்க: எள்ளு – 2 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், மிளகு – 1 டீஸ்பூன். தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், எண்ணெய் – கால் கப்.

செய்முறை: வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். புளியை இரண்டரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிவக்க (எள்ளு நன்கு வெடிக்க) வறுத்து பொடித்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து வெங்காயம் சேருங்கள். வெங்காயம் நன்கு சிவந்து வதங்கிய பின் தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு புளிக்கரைசலை ஊற்றி பச்சை வாசனை போகக் கொதித்தபின் பொடித்து வைத்த பொடி சேர்த்து கொதிக்கவிட்டு இறக்குங்கள். சுவையும் மணமும் உங்கள் நாக்கிலேயே நிற்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X