தேவையானவை:
- நன்கு பழுத்த கெட்டியான தக்காளி 4,
- மிளகுத்தூள் 2 டீஸ்பூன்,
- சீரகத்தூள் ஒரு டீஸ்பூன்,
- எலுமிச்சை சாறு 2 டீஸ்பூன்,
- எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: தக்காளியைப் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங் கள். அதனுடன் மிளகுத் தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்து 15 நிமிடம் வையுங்கள். பிறகு உப்புத்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து 5 நிமிடம் ஊறவையுங்கள்.
தோசைக்கல்லைக் காயவைத்து அதன்மேல் தக்காளித் துண்டுகளைச் கற்றிலும் அடுக்குங்கள். கற்றிலும் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் நன்கு புரட்டிவிட்டு, 10 நிமிடம் வேக வைத்து எடுங்கள். தவா தக்காளி ரெடி. சப்பாத்திக்கு சரியான சைட்டிஷ்!