தேவையானவை:
- உளுத்தம்பருப்பு முக்கால் கப்,
- பாசிப்பருப்பு கால் கப்,
- வெல்லம் (அல்லது)
- பொடித்த சர்க்கரை ஒரு கப்,
- நெய் தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பை, வாசம் வரும்வரை சிவக்க வறுத்தெடுங்கள். பாசிப்பருப்பையும் சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள். இரண்டையும் மிஷினில் அல்லது மிக்ஸியில் நைஸாக அரைத்துக்கொள்ளுங்கள். பொடித்த சர்க்கரையையும் மாவுடன் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். நெய்யை சூடாக்கி, சிறிது சிறிதாக மாவில் சேர்த்து, உருண்டை பிடிக்கும் பதம் வந்ததும் உருண்டைகளாகப் பிடியுங்கள். சின்ன அச்சுகளிலோ அல்லது சிறு கிண்ணங்களிலோ மாவை அடைத்து ஒரு டிரேயில் தட்டி, பர்ஃபிகளாக எடுக்கலாம்.
வெல்லம் சேர்ப்பதாக இருந்தால், பொடித்த வெல்லத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டி, சூடான நெய்யையும் வெல்ல நீரையும் சிறிது சிறிதாக மாவில் ஊற்றி, உருண்டை பிடிக்கும் பதம் வரும் வரை கலந்து, பிறகு பர்ஃபிகளாக செய்யுங்கள்.