...

தேங்காய் தோசை

தேவையானவை:

  • பச்சரிசி   1 கப்,
  • உளுத்தம்பருப்பு   கால் கப்புக்கு சற்று குறைய,
  • தேங்காய் (துருவியது)   கால் மூடி,
  • உப்பு   தேவையான அளவு,
  • எண்ணெய்   தேவையான அளவு.

செய்முறை: அரிசி + பருப்பை கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து, தேங்காய் + உப்பு சேர்த்து நன்றாக ஆட்டி வைக்கவும். 10 மணி நேரத்திற்கு பின் (சிறிது பொங்கியதும்) தோசைகளாகச் சுட்டு எடுக்கவும்.

இந்த தோசைக்கு காய்ந்த மிளகாய்   8, பூண்டு   2 பல், புளி   3 சுளை, உப்பு சேர்த்து பச்சையாக அரைத்து, பின் வாணலியில் 4 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு + பெருங்காயம் தாளித்து, அரைத்த சட்னியில் சூட்டுடன் விட்டு பரிமாறவும். மாலை நேரத்துக்கு ஏற்ற ருசியான சிற்றுண்டி இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.