நான்

தேவையானவை: மைதா & 4 கப், ஈஸ்ட் (டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் ‘டிரை ஈஸ்ட்’ என்று கேட்டால் பாக்கெட்டாக கிடைக்கும்) & ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை & ஒரு டீஸ்பூன், நெய் & ஒரு டீஸ்பூன், ஆப்பசோடா & அரை டீஸ்பூன், உப்பு & ஒரு டீஸ்பூன், பால் & அரை கப், தயிர் & அரை கப்.

செய்முறை: சர்க்கரையுடன் ஈஸ்ட் கலந்து வெதுவெதுப்பான பால் சேர்த்து மூடிவையுங்கள். பத்து நிமிடம் கழித்துத் திறந்து ஈஸ்ட் கரைந்தவுடன், தயிர் சேர்த்து மூடி வையுங்கள். 10 & 15 நிமிடங்கள் கழித்துத் திறந்தால், அந்தக் கலவை புளித்து நுரைத்து வந்திருக்கும். மாவுடன் உப்பு, ஆப்பசோடா கலந்து சலித்துக்கொள்ளுங்கள். அதனுடன் நெய் சேர்த்துப் பிசறி, நுரைத்திருக்கும் ஈஸ்ட் கலவையை சேருங்கள். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து, இளக்கமாக பிசைந்துகொள்ளுங்கள். இதை ஒரு பாத்திரத்தில் போட்டு, 5 முதல் 6 மணி நேரம் (மாவு இரண்டு மடங்காகும்) வரை மூடி, கதகதப்பான இடத்தில் வையுங்கள்.

ஐந்தாறு மணி நேரம் கழித்துத் திறந்தால், மாவு பஞ்சு போல நுரைத்திருக்கும். அதிலிருந்து சிறிதளவு மாவை எடுத்து, முக்கோண வடிவத்தில் கால் அங்குல கனத்தில் திரட்டிக்கொள்ளுங்கள். அதன் மேல் ஒரு பக்கத்தில் தண்ணீரைத் தடவிக்கொள்ளுங்கள். தோசைக்கல்லைக் காயவைத்து, தண்ணீர் தடவிய பக்கம் மேல்புறமாக இருக்குமாறு போடுங்கள். தண்ணீர் தடவி இருப்பதால் அது கல்லில் ஒட்டிக்கொள்ளும். மிதமான தீயில் வேகும்போது, மேல்புறத்தில் சிறுசிறு குமிழ்களாக எழும்பும். பிறகு, கல்லோடு அப்படியே திருப்பி, நானின் மேல்புறத்தை தீயில் காட்டி வேகவிடுங்கள் (கைப்பிடி உள்ள தோசைக்கல்லாக, எடை குறைவானதாக இருந்தால் சுலபமாக திருப்ப வரும்). மறுபுறமும் வாட்டியபின், ஒரு கத்தியால் எடுத்தால் நான் வந்துவிடும். விருப்பம்போல அதன் மேலே நெய் அல்லது வெண்ணெய் தடவி பரிமாறுங்கள்.  சூப்பரான் அநான் வீட்டிலேயே தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X