பச்சடி தேவையானவை:
- சுமாரான அளவில் நார்த்தங்காய் 2,
- மிளகாய்தூள் அரை டீஸ்பூன்,
- உப்பு திட்டமாக,
- கடுகு கால் டீஸ்பூன்,
- கறிவேப்பிலை சிறிதளவு,
- வெல்லத் தூள் கால் கப்,
- எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: நார்த்தங்காயைப் பொடியாக நறுக்கி, எண்ணெய் விட்டு வதக்கி, பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். வாணலியில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெந்த நார்த்தங்காயைப் போட்டு உப்பு, மிளகாய்தூள், கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். கடைசியாக வெல்லத் தூளைப் போட்டு, கரைந்ததும் இறக்கவும். பொதுவாக இந்தப் பச்சடிக்கே இனிப்பு கொஞ்சம் கூடுதலாகத் தேவைப்படும். எனவே, காயின் கசப்பைப் பொறுத்து வெல்லம் போட வேண்டும்