தேவையானவை:
- உரித்த பட்டாணி கால் கிலோ,
- பெரிய வெங்காயம் 2,
- வரமிளகாய் 2,
- சீரகம் அரை டீஸ்பூன்,
- கடுகு கால் டீஸ்பூன்,
- உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன்,
- கறிவேப்பிலை,
- மல்லி இலை தலா சிறிதளவு,
- எண்ணெய் கால் கப்,
- உப்பு தேவையான அளவு.
செய்முறை: பட்டாணியை வேக விட்டு உப்புப் போட்டு இறக்கி, தண்ணீரை வடிக்கவும். வரமிளகாயுடன் சீரகத்தையும், ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கிச் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து மீதமிருக்கும் இன்னொரு வெங்காயத்தையும் நறுக்கிச் சேர்த்து வதக்கவும். பட்டாணியையும், உப்பையும், அரைத்த மசாலாவையும் பிரட்டி இறக்கி, மல்லி இலை சேர்க்கவும். பட்டர்பீன்ஸிலும் இதே முறையில் பொரியல் செய்யலாம். நன்றாக இருக்கும்.