தேவையானவை:
- பரங்கிக்காய் 100 கிராம்,
- பச்சை மிளகாய் 2,
- சின்ன வெங்காயம் ஐந்தாறு,
- தயிர் 2 கப்,
- கடுகு ஒரு டீஸ்பூன்,
- உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்,
- தேங்காய் துருவல் ஒரு டேபிள்ஸ்பூன்,
- எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்,
- உப்பு திட்டமாக,
- பொடியாக நறுக்கிய மல்லித்தழை,
- கறிவேப்பிலை தலா சிறிதளவு.
செய்முறை: பரங்கிக்காயை தோல்சீவி, துண்டுகளாக நறுக்கி, ஆவியில் வைத்து வேகவைக்கவும் (ஒரே ஒரு ஆவி வைத்தால் போதும்). வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கி, வெந்த பரங்கிக்காயுடன் சேர்க்கவும். உப்பு, தேங்காய் துருவல், மல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். சாப்பிடும் சமயம் தயிர் சேர்த்துக் கொள்ளவும். வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்தத் தயிர்பச்சடி.