பருப்பு வெங்காய சப்ஜி

தேவையானவை:

  • கடலைப்பருப்பு அரை கப்,
  • பெரிய வெங்காயம் 2,
  • தக்காளி 3,
  • இஞ்சி&பூண்டு விழுது 2 டீஸ்பூன்,
  • மிளகாய்தூள் ஒன்றரை டீஸ்பூன்,
  • புளி விழுது 2 டீஸ்பூன்,
  • உப்பு தேவையான அளவு.

தாளிக்க: சீரகம் அரை டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கடலைப்பருப்பை வேகவையுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து சீரகம் தாளித்து, வெங்காயம் சேருங்கள். வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி&பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போக வதக்குங்கள். அத்துடன் தக்காளி, மிளகாய்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி பருப்பு, புளி விழுது சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். புளிப்பும் காரமும் சேர்ந்த வித்தியாசமான சப்ஜி இது. சாதம், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது.