தேவையானவை:
பாசிப்பருப்பு – ஒரு கப்,
பச்சரிசி – கால் கப்,
சர்க்கரை – ஒரு கப்,
தேங்காய் துருவல் – அரை கப்,
ஏலக்காய்தூள் – அரை டீஸ்பூன்,
ஆப்ப சோடா – சிட்டிகை,
நெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை: பருப்பு, அரிசி இரண்டையும் தனித்தனியே ஒரு மணிநேரம் ஊற வையுங்கள். பிறகு சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள். அரைத்த மாவுடன் தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய் ஆப்ப சோடா, பாதியளவு நெய் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். நெய் தடவிய ட்ரேயில் ஊற்றி நன்கு வேகவைத்தெடுங்கள் (நன்கு வெந்த அடையாளமாக ஒரு கத்தியை நுழைத்தால் ஒட்டாமல் வரவேண்டும்). துண்டுகள் போட்டு, சூடாக சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.