தேவையானவை:
- பாசிப்பருப்பு அரை கப்,
- காய்ந்த மிளகாய் 5,
- பூண்டு 6 பல்,
- சீரகம் அரை டீஸ்பூன்,
- புளி விழுது ஒரு டேபிள்ஸ்பூன்,
- உப்பு தேவையான அளவு,
- மல்லித்தழை சிறிதளவு,
- வெல்லத்தூள் சிறிதளவு,
- பிரெட் 8 ஸ்லைஸ்,
- நெய் ஒரு டேபிள்ஸ்பூன்,
- எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பருப்பை ஊறவைத்து மிளகாய், பூண்டு, சீரகம், புளி விழுது, உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள். பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்து பிசையுங்கள். ஒவ்வொரு பிரெட் ஸ்லைஸின் மேலும் இந்த விழுதைத் தடவுங்கள். தோசைக்கல்லை காய வைத்து, பருப்புக் கலவை தடவிய பக்கம் கல்லில் படுமாறு போட்டு நெய், எண்ணெய் கலந்து சுற்றிலும் ஊற்றி இருபுறமும் சுட்டெடுங்கள் (உப்பு கலந்த வெண்ணெய் சேர்த்து சேர்த்தும் சுடலாம்). இந்த டோஸ்ட், புதுமையான ‘ஈவினிங் ஸ்நாக்’.