தேவையானவை:
- பாசிப்பருப்பு அரை கப்,
- காய்ந்த மிளகாய் 4,
- தேங்காய் துருவல் ஒரு டேபிள்ஸ்பூன்,
- பூண்டு 3 பல்,
- உப்பு தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை வெறும் கடாயில் நன்கு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். பொன்னிறமாக வறுத்ததும் இறக்கி ஆறவிட்டு, மற்ற பொருட்களோடு சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள். அம்மியில் அரைத்தால் அற்புதமான மணமும் ருசியும் கொடுக்கும். சூடான ரசம் சாதம், உடைத்த அரிசி ரவைக் கஞ்சி, தண்ணீர் விட்ட சாதம்.. என எதற்கும் ஈடு கொடுக்கும் இந்தத் துவையல்.