பாசிப்பருப்பு ரசம்

தேவையானவை:

  • பாசிப்பருப்பு  கால் கப், புளி  கொட்டைப்பாக்கு அளவு,
  • உப்பு  ஒரு டீஸ்பூன், தக்காளி  1,
  • சாம்பார்தூள்  ஒரு டீஸ்பூன்,
  • பெருங்காயத்தூள்  கால் டீஸ்பூன்,
  • தனியாதூள்  அரை டீஸ்பூன்,
  • மஞ்சள்தூள்  கால் டீஸ்பூன்,
  • சீரகத்தூள்  கால் டீஸ்பூன்.

தாளிக்க:

  • காய்ந்த மிளகாய்  1,
  • கடுகு  கால் டீஸ்பூன்,
  • கொத்துமல்லி,
  • கறிவேப்பிலை  சிறிது,
  • எண்ணெய்  ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, தக்காளி, கொத்துமல்லி, கறிவேப்பிலை இவற்றைச் சேர்த்து வதக்கவும். பிறகு புளியை ஒன்றரை கப் நீரில் கரைத்து அதில் ஊற்றவும். உப்பையும் போடவும். கொதிக்க ஆரம்பித்ததும் பெருங்காயத்தூள், சாம்பார்தூள், தனியாதூள், சீரகத்தூள் இவற்றைப் போடவும். வெந்த பாசிப்பருப்பை கடைசியாகச் சேர்த்து, கொதித்ததும் இறக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *